/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மி.மீ., மழை
/
காரைக்குடியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மி.மீ., மழை
காரைக்குடியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மி.மீ., மழை
காரைக்குடியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மி.மீ., மழை
ADDED : அக் 16, 2025 05:40 AM

சிவகங்கை : மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக காரைக்குடியில் 50 மி.மீ., மழை பதிவானது. மழைக்கு கல்லுாரணியில் ஓட்டு வீடு சேதமானது.
சிவகங்கை மாவட்ட அளவில் கோடை உழவுக்கு போதிய மழையின்றி விவசாயிகள், நடவு செய்த நெற்பயிர்களை அழிக்க தொடங்கினர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நிலத்தை உழவு செய்து, மானாவாரியாக நெல், பருத்தி, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடுவதற்கான பணிகளை துவக்கியுள்ளனர்.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி மாவட்ட அளவில் அதிகபட்சமாக காரைக்குடியில் ஒரே நாளில் 50 மி.மீ., வரை மழை பதிவானது. குறைந்த பட்சமாக சிங்கம்புணரியில் 3 மி.மீ., மழை பெய்தது. இந்த மழைக்கு சிவகங்கை அருகே கல்லுாரணி கற்பகவிநாயகபுரம் வேலு என்பவரது ஓட்டு வீடு பகுதி சேதமானது.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் கண்மாய்களில் நீர்நிலை உயர்ந்தால், ஒரு போக நெல் நடவுக்கு இந்த மழை நீர் கைகொடுக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.