/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி சாலை விரிவாக்க நிலப்பதிவுக்கு தடை நிலம் பதிவு செய்ய தடை
/
காரைக்குடி சாலை விரிவாக்க நிலப்பதிவுக்கு தடை நிலம் பதிவு செய்ய தடை
காரைக்குடி சாலை விரிவாக்க நிலப்பதிவுக்கு தடை நிலம் பதிவு செய்ய தடை
காரைக்குடி சாலை விரிவாக்க நிலப்பதிவுக்கு தடை நிலம் பதிவு செய்ய தடை
ADDED : டிச 09, 2025 06:08 AM
சிவகங்கை: காரைக்குடி -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கான, நிலம் கையகம் செய்வதற்காக காரைக்குடி தாலுகாவில் தேர்வு செய்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது.
திருச்சி-காரைக்குடி-- ராமேஸ்வரம் வரையிலான 210 தேசிய நெடுஞ்சாலை, இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காரைக்குடி வருவதால், காரைக்குடி - - திருச்சி வரையிலான 93.8 கி.மீ., துார இருவழி தேசிய நெடுஞ் சாலையை, 4 வழிச் சாலையாக தரம் உயர்த்துவதற்கான விபர அறிக்கை தயாரித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய அரசின் ஒப் புதலுக்கு அனுப்பி யுள்ளது.
இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் இருந்து திருச்சி வரை 4 வழிச் சாலையாக ரோட்டை விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர், ராமநாதபுரம் மூலம் நிலங்களை கையகம் செய் வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையடுத்து ரோடு விரிவாக்க பகுதி களுக்கென தேர்வு செய்யப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு இடங்களை வகைப்படுத்தி பட்டியல் தயாரித்து உள்ளனர்.
எனவே காரைக்குடி அருகே அமராவதிபுதுார், காரைக்குடி வார்டு 16, 17 பகுதிகள், செஞ்சை, கோவிலுார், கழனிவாசல், காரைக்குடி நகர், நெற்புகப்பட்டி, கானாடுகாத்தான், மானகிரி சுக்கானேந்தல், திருவேலங்குடி, கொத்தரி போன்ற பகுதியில் உள்ள புல எண்களை குறிப்பிட்டு அவற்றை பத்திரபதிவு செய்ய தடை விதித்து உள்ளனர்.
இதற்கான பட்டியலை காரைக்குடியில் உள்ள இரண்டு இணை சார் பதிவாளர்களுக்கு அனுப்பி உத்தரவிடப்பட்டுள்ளது.

