/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி துாய்மை பணியாளர் குடியிருப்பிற்கு குடிநீரின்றி அவதி
/
காரைக்குடி துாய்மை பணியாளர் குடியிருப்பிற்கு குடிநீரின்றி அவதி
காரைக்குடி துாய்மை பணியாளர் குடியிருப்பிற்கு குடிநீரின்றி அவதி
காரைக்குடி துாய்மை பணியாளர் குடியிருப்பிற்கு குடிநீரின்றி அவதி
ADDED : செப் 08, 2025 06:10 AM
காரைக்குடி : காரைக்குடியில் துாய்மை பணியாளர் குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல், அக்குடும்பத்தினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட கே.எம்.சி., காலனியில் துாய்மை பணியாளர்களுக்கென 8 வீடுகள் கொண்ட அபார்ட்மென்ட் ரூ.2.30 கோடியில் கட்டினர். அந்தவகையில் 12 அபார்ட்மென்ட்கள் கட்டி கொடுத்துள்ளனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில்லை.
மேலும் குடியிருப்புகளை சுற்றி சுகாதார பணிகளை மேற்கொள்ளாததால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குடியிருப்பு வீடுகள் கட்டி 10 ஆண்டுகளான நிலையில் தொடர்ந்து பராமரிப்பு பணியின்றி, வீடுகள் சிதிலமடைந்து வருகின்றன. வாகனம் மூலம் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இதனால், துாய்மை பணியாளர்கள் குடும்பம் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
இது குறித்து மாநகராட்சி கவுன்சிலர் (அ.தி.மு.க.,) பிரகாஷ் கூறியதாவது, துாய்மை பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள பிரச்னை குறித்து தொடர்ந்து வரும் மாநகராட்சி கமிஷனர்களிடம் புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார்.