/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி: குடிநீரில் கழிவுநீர் கலப்பு
/
காரைக்குடி: குடிநீரில் கழிவுநீர் கலப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:27 AM
சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சி 3வது வார்டு ஆறுமுக நகரில் ஆழ்குழாய் கிணற்றில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதாக கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
காரைக்குடி மாநகராட்சி 3வது வார்டு ஆறுமுக நகர் பகுதியில் கழிவு நீர் கொண்டு செல்ல பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்கள்தரமின்றி காணப்படுவதால், காலப்போக்கில் அவை உடைந்து பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி வருகிறது.
ஆறுமுக நகர் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இக்கழிவு நீர் இறங்கி, குடிநீர் துர்நாற்றம் வீசுவதோடு, சாக்கடை கழிவு நீர் போல் குடிநீர் வருகிறது. காரைக்குடி ஆறுமுக நகர் மக்கள் நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்துள்ளனர்.
செயல்படாத மாநகராட்சி அதிகாரிகள்: ஆறுமுகநகர்லலிதாராணி கூறியதாவது:
எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் சேதமாகி, குழாயில் இருந்து கழிவுநீர் ஆழ்குழாய் கிணறுகளுக்குள் கலக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கலெக்டரிடம் புகார் அளித்தோம், என்றார்.