தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடியில் ரூ. 100 பத்திரத்திற்கு தட்டுப்பாடு

காரைக்குடியில் ரூ. 100 பத்திரத்திற்கு தட்டுப்பாடு

காரைக்குடியில் ரூ. 100 பத்திரத்திற்கு தட்டுப்பாடு


UPDATED : ஆக 11, 2026 03:22 PM

ADDED : ஆக 11, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 03:22 PM ADDED : ஆக 11, 2026 03:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி:காரைக்குடியில் ஒப்பந்த பத்திரம், கடை வாடகை உட்பட பல்வேறு தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ரூ. 100 பத்திரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

காரைக்குடி திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில்

பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி மட்டுமின்றி புதுவயல், கோட்டையூர், கண்டனுார் உட்பட சுற்று வட்டார பகுதி மக்கள் பத்திரப்பதிவுக்காக வந்து செல்கின்றனர். வங்கிகளில் கடன் பெறுதல், பல்வேறு உறுதிமொழி பத்திரம், வீடு, கடை வாடகை ஒப்பந்தம் தனிநபர் இடையேயான ஒப்பந்தம் சொத்துப் பரிவர்த்தனை மின் இணைப்பு மாற்றம் வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ரூ.100 பத்திரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. மாவட்ட கருவூலங்கள் மூலம், பத்திர விற்பனையாளர்கள் பத்திரங்களைப் பெற்று விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக ரூ.100 பத்திரத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பத்திர எழுத்தர்கள் கூறியதாவது;

கடந்த 10 நாட்களாக ரூ.100 பத்திரம் தட்டுப்பாடு நிலவுகிறது. மற்ற பத்திரத்திற்கான தொகைகளை இ பேமண்ட் மூலம் செலுத்தி விடுவோம். ஆனால், உள்நாட்டு பத்திரம், மின் இணைப்பு உள்ளிட்ட பலவற்றிற்கும் ரூ. 100 பத்திரம் அவசியமானதாகும்

தட்டுப்பாடு காரணமாக அக்ரிமென்ட் அடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடின்றி ரூ.100 பத்திரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us