/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கரிகாலசோழீஸ்வரர் கோயில்மாசி திருவிழா கொடியேற்றம்
/
கரிகாலசோழீஸ்வரர் கோயில்மாசி திருவிழா கொடியேற்றம்
ADDED : பிப் 16, 2024 05:12 AM

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில், பிப்., 14 அன்று அனுக்கை, கணபதி ேஹாமத்துடன் முகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று காலை 7:45 மணிக்கு கொடி படம் சுற்றுதலும், அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, மாசி திருவிழா துவங்கியது. கொடி மரத்திற்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
நேற்று மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. நேற்று இரவு 7:15 மணிக்கு முதல் நாள் மண்டகப்படியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
பிப்., 23 காலை 8:30 மணிக்கு தேருக்கு சிறப்பு தீபாராதனை காண்பித்து, அன்று காலை 9:30 மணிக்கு மாசி திருவிழா தேரோட்டம் நடக்கிறது. தேவஸ்தான கண்காணிப்பாளர் பி.சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் ஆகியோர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
சதுர்வேதமங்கலம்: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசிமகத் திருவிழா தொடங்கியது.
ருத்ரகோடீஸ்வரர் கோயில்
குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலின் மாசிமகத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கிராம மக்கள் முன்னிலையில் உமாபதி சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ரிஷப கொடியேற்றினார். தொடர்ந்து சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்புக்கட்டப்பட்டது. 10 நாள் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருவார்.
பிப்.19ம் தேதி காலை 9:30 மணிக்கு ஆத்மநாயகி அம்பாள் ருத்ரகோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பிப். 20ல் சமணர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் கழுவன் திருவிழாவும், பிப் 23 ல் தேரோட்டமும் நடக்கிறது.
விழாவின் கடைசி நாளான பிப். 24ம் தேதி தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரமுள்ள அரளிப்பாறை கோயிலுக்கு மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி எழுந்தருளினார்.
அங்கும் இரவு 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு தண்டாயுதபாணிக்கு காப்புக்கட்டப்பட்டு திருவிழா துவங்கியது.