நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மத்திய அரசின் கேலோ இந்தியா அஸ்மிதா கிக் பாக்ஸிங் லீக் போட்டி சென்னை நேரு பார்க்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடந்தது. இதில் 18 மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் சிவகங்கை கிக்பாக்ஸிங் வீராங்கனைகள் 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களை கலெக்டர் பொற்கொடி பாராட்டினார். தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்களையும் அவர்களை ஊக்குவித்த தலைமையாசிரியர்கள், கிக்பாக்ஸிங் சங்க பொதுச்செயலாளர் குணசீலன், பயிற்சியாளர் சித்ராவை பாராட்டினார்.