ADDED : ஜன 11, 2026 05:26 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: பூவந்தி அருகே துவரங்குளத்தில் கிடா முட்டு மோதல் நடந்தது.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாத புரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங் கேற்றன.
கிடா வளர்போர் உரிமை யாளர் சங்கம் சார்பில் நடந்த இப்போட்டியில் ஒரு சுற்றுக்கு 2 கிடாக்கள் வீதம் கலந்து கொண்டன. இந்த போட்டியில் களத்தில் இறங்கும் சம வயதுள்ள இரு கிடாக்களும் 60 முறை முட்ட வேண்டும். எந்த கிடா முட்டாமல் திடலை விட்டு வெளியே செல்கிறதோ, அது தோற்றதாக அறிவிக்கப் படும்.
மேலும் இரு கிடாக்களும் 60 முறை முட்டி விட்டால் இரண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் வெற்றி பெற்ற கிடாக் களின் உரிமையாளர் களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
