ADDED : மார் 23, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: மார்ச் 23-: தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பங்குனி உற்ஸவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் மாலையில் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து, பூஜைகள் நடைபெறும். அபிராமி அந்தாதி முற்றோதல் நடத்தினர்.
கோயில் முன் பெண்களுக்கான கோலப் போட்டிகள் நடந்தது. இதில் சிறப்பு பரிசினை சரஸ்வதி என்ற பெண் பெற்றார். நாளை பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர்.
