
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை.: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் கோலாட்ட திருவிழா அக்.31ல் துவங்கி நவ.9 வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்.31 அன்று செங்கமலத்தான் ஊருணியில் களிமண் எடுத்து வந்து நவ.1ல் பசுவும் கன்றும் செய்து நவ.9 வரை தினசரி பூஜை செய்து நிறைவு நாளன்று
பெண்கள் கோலாட்டம் அடித்து கோயில் முன் உள்ள தெப்பக்குளத்தில் பசுவும் கன்றையும் மலை ஏற்றும் வைபவம் நடைபெற உள்ளது. தினசரி மாலை 6:30 மணிக்கு கண்ணுடையநாயகி அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.