ADDED : செப் 20, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, செப். 21-–
சிவகங்கையில் இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஸ்டமி விழா நடைபெற்றது.
முதலில் கீர்த்தனையுடன் விழா துவங்கியது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கிருஷ்ணரின் வரலாறு குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, மகா அபிேஷகமும் நடந்தது. மாறு வேட போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பி.எஸ்.ஓய்., கல்வி நிறுவன தலைவர் சரஸ்வதி பரிசுகளை வழங்கினார். சுப்பிரமணியன் சிறப்பு வகித்தார். இஸ்கான் அமைப்பினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
///
