
சிவகங்கை; சிவகங்கை ரோஸ்நகர், அழகுமெய்ஞானபுரம், பனங்காடி ரோடு, அண்ணா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள், இளைஞர்களால் தனலெட்சுமி நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஆக.9ல் காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு பால்குடம், அண்ணா நகர் கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இரவு 7:00 மணிக்கு கிருஷ்ண பகவான் ரத ஊர்வலம் நடந்தது.
இளையான்குடி: தாயமங்கலம் சந்தான கோபால கிருஷ்ணன் கோயிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து சந்தான கோபால கிருஷ்ணருக்கு அபி ஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
கோயில் வளாகத்தில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு கோயில் முன் சிறுவர்கள், மகளிர் களுக்கான விளை யாட்டுப் போட்டி,உறியடி திருவிழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
* சிறுபாலை மற்றும் பல்வேறு கிராமங் களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் விளையாட்டுப் போட்டி களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
* அன்னவாசல் புதுார் கிராமம் கோபாலகிருஷ்ண கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபி ேஷகம் நடத்தப் பட்டது.