நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:
திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று (30ம் தேதி) நான்காம் கால யாகசாலை பூஜை காலை ஏழு மணிக்கு தொடங்குகிறது.
காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் பாமா, ருக்மணி சமேத பாலகிருஷ்ண பெருமாள் கோயில் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பாமா, ருக்மணி சமேத பாலகிருஷ்ண பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் திருப்புவனம் மேற்கு பள்ளி எதிரே அமைந்துள்ள குதிரை மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை யாதவர் பண்பாட்டு கழகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

