/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம்: திருமணம் நடந்தால் மையம் கிடையாது
/
சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம்: திருமணம் நடந்தால் மையம் கிடையாது
சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம்: திருமணம் நடந்தால் மையம் கிடையாது
சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம்: திருமணம் நடந்தால் மையம் கிடையாது
ADDED : ஏப் 08, 2025 05:28 AM

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடி புதுக்குடியிருப்பில் ஓராண்டுக்கும் மேலாக சமுதாயக்கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சி புதுக் குடியிருப்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. தற்போது இலுப்பக்குடி ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதுக் குடியிருப்பில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது. கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அங்கன்வாடி மையம் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
பெற்றோர்கள் கூறுகையில், அங்கன்வாடி பழைய கட்டடம் பராமரிப்பின்றி கிடக்கிறது. சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சமுதாய கூடத்தில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அல்லது ஏதேனும் ஒரு தற்காலிக இடத்தில் செயல்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதி விரைவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

