ADDED : ஜன 08, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் பிரத்யங்கிரா தேவி கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் ேஹாமம் நடந்தது.
அரசு தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காகவும், உலக நன்மைக்காக நடந்த ேஹாமத்தில் பூஜிக்கப்பட்ட ஹயக்ரீவர் படம், பேனா, குங்குமம், கற்கண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட பிராமண சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் வைத்தியநாதன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், கிளை தலைவர் முத்துவடுகநாதன், சங்கர் பங்கேற்றனர்.