/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருமணவயல் கோயிலில் விளக்கு பூஜை
/
திருமணவயல் கோயிலில் விளக்கு பூஜை
ADDED : ஆக 28, 2025 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: திருமணவயல் உடையார்குடியிருப்பில் தியான மண்டபத்தின் மீது பீடமாக மகா கணபதி கோயில் உள்ளது. சதுர்த்தியன்று கணபதி ஹோமத்தை தொடர்ந்து மகா கணபதிக்கு அபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் குழுவினர் அபிராமி அந்தாதி முற்றோதல் செய்தனர். வள்ளி பாலகிருஷ்ணன் பாடல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை அபிஷேகத்தை தொடர்ந்து மகா கணபதி சரஸ்வதி, மகாலட்சுமி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பெண்கள் விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டனர்.
சாரதாஆசிரம தலைவி சாரதேஸ்வரி ப்ரியாம்பா பூஜையை நடத்தினார். வட்டார கல்வி அலுவலர் குமார் திருக்குறள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் வரவேற்றனர்.