/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் சட்டக்கல்லுாரி கட்டடம் அடுத்த மாதம் திறப்பு
/
காரைக்குடியில் சட்டக்கல்லுாரி கட்டடம் அடுத்த மாதம் திறப்பு
காரைக்குடியில் சட்டக்கல்லுாரி கட்டடம் அடுத்த மாதம் திறப்பு
காரைக்குடியில் சட்டக்கல்லுாரி கட்டடம் அடுத்த மாதம் திறப்பு
ADDED : டிச 18, 2025 05:44 AM

காரைக்குடி: காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டம், வேளாண் கல்லுாரி கட்டடங்களை அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் பொற்கொடி பார்வையிட்டனர்.
காரைக்குடியில் 2022 ஆண்டு சட்டக் கல்லுாரி தொடங்கப்பட்டது. அழகப்பா இன்ஜி., கல்லுாரி கட்டடத்தில் தற்காலிகமாக கல்லுாரி செயல்பட்டு வருகிறது. சட்டக் கல்லுாரிக்கான புதிய கட்டடம் கட்ட திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு 19.16 ஏக்கரில் ரூ.100.45 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
செட்டிநாட்டில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிய வேளாண் கல்லுாரி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் காரைக்குடி கழனிவாசலில் வீறு கவியரசர் முடியரசனாருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. புதிய கட்டடப் பணிகளை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி பார்வையிட்டனர். சட்டக் கல்லுாரி மற்றும் வேளாண் கல்லுாரி கட்டடப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளதால் வரும் ஜனவரியில் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

