/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆட்டோ டிரைவர் கொலையில்சட்டக்கல்லுாரி மாணவர் கைது
/
ஆட்டோ டிரைவர் கொலையில்சட்டக்கல்லுாரி மாணவர் கைது
ADDED : டிச 15, 2024 01:20 AM
சிவகங்கை:சிவகங்கையில் தீபாவளியன்று கீழவாணியங்குடியில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலையில் தொடர்புடைய சட்டக்கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை வாணியங்குடியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மணிகண்டன் 40, ரவி மகன் அருண்குமார் 26, கணேசன் மகன் ஆதிராஜா 50, மூவரையும் முன்விரோதம் காரணமாக தீபாவளியன்று மாலை 5:00 மணிக்கு கீழவாணியங்குடி நாடக மேடை அருகே உள்ள கண்மாய் கரையில் டூவீலர்களில் வந்த கும்பல் வாள் உள்ளிட்டவைகளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் மணிகண்டன் இறந்தார். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் இதில் தொடர்புடையவர்களை பிடிக்க டி.எஸ்.பி., அமல அட்வின் தலைமையில் 4 தனிப்படை அமைத்தார். 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சட்டக்கல்லுாரி மாணவரான கீழக்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்தோஷ்குமார் 22, தஞ்சாவூர் பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுவரைமொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.