/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி தலைவிகளுக்கு தலைமை பண்பு பயிற்சி
/
ஊராட்சி தலைவிகளுக்கு தலைமை பண்பு பயிற்சி
ADDED : செப் 20, 2024 06:49 AM
சிவகங்கை: சிவகங்கையில் ஊரக வளர்ச்சி முகமை, லயன்ஸ் சங்கம் சார்பில் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஏ.அனந்தராமன், உதவி இயக்குனர் (ஊராட்சி) கேசவதாசன் வாழ்த்துரை வழங்கினர்.
லயன்ஸ் சங்க தலைவர் விஸ்வநாதன், ஜெசிஐ., பயிற்சியாளர் குமார், எஸ்தர் ஜான்சி ராணி பெண் ஊராட்சி தலைவர்களுக்கு ஆளுமை திறன் குறித்து பயிற்சி அளித்தனர்.
திட்ட ஆலோசகர்கள் முத்துக்கண்ணன், ராம்பிரபாகர், ஜெயக்குமார், லயன்ஸ் செயலாளர் தனபாலன் பங்கேற்றனர். லயன்ஸ் பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.