/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் பயிரில் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்
/
நெல் பயிரில் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்
ADDED : நவ 14, 2025 04:19 AM
சிவகங்கை: விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் உருவாகும் இலைச்சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்த அதிகமான யூரியா உரமிடுதலை தவிர்த்து உரிய தடுப்பு முறைகளை கையாண்டு பயிரை காத்துக்கொள்ளுமாறு வேளாண் இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிர்கள் 20 நாட்கள் முதல் 50 நாட்கள் வரை வயதுடைய பயிர்களாக உள்ளது. சில இடத்தில் நாற்றங்காலில் பயிர் உள்ளது. இந்த பயிர்களை இலைச்சுருட்டுப்புழு தாக்கக்கூடும். இவ்வாறு தாக்கினால் பயிரின் இலைகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தாக்குதல் அதிகமாக இருந்தால் பயிர்களின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்பாடும். இவற்றை கட்டுப்படுத்த அதிகமான யூரியா உரமிடுதலை தவிர்க்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு குயினால்பாஸ் 500 மிலி அல்லது கார்டாப்ஹைட்ரோகுளோரைடு 250 கிராம் அல்லது புளுபென்டமைடு 30 மில்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
தண்டு துளைப்பான் புழுவால் பயிர்கள் தாக்கப்பட்டால் தண்டு பகுதி பாதிக்கப்பட்டால் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4G எனும் குருனை வடிவிலான மருந்தினை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் பயிர் முளைத்த 25 முதல் 30 நாட்களுக்குள் இடுவதன் மூலம் இப்புழுவின் பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
பயிரில் இப்புழுவின் பாதிப்பு இருப்பின் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதவீதம் Sp எனும் மருந்தினை ஏக்கருக்கு 200 கிராம் எனும் அளவில் 100 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதால் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். செந்தாழை நோயால் பாதிக்கப்பட்டால் நெல் பயிரில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 50 கிலோ மணலுடன் கலந்து வயலில் துாவ வேண்டும். ஜிங்க் திரவத்தினை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி எனும் அளவில் 100 லிட்டர் நீரி ல் கலந்து தெளிப்பதன் மூலம் செந்தாழை நோயில் இருந்து பயிரை காத்துக்கொள்ளலாம். மேலும் பயிர்களின் சத்துகுறைபாடு குறித்த விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம் என்றார்.

