/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைக்கு ஒழுகும் அலுவலகம் கேள்விக்குறியாகும் ஆவணங்கள்
/
மழைக்கு ஒழுகும் அலுவலகம் கேள்விக்குறியாகும் ஆவணங்கள்
மழைக்கு ஒழுகும் அலுவலகம் கேள்விக்குறியாகும் ஆவணங்கள்
மழைக்கு ஒழுகும் அலுவலகம் கேள்விக்குறியாகும் ஆவணங்கள்
ADDED : ஆக 14, 2025 02:29 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுார் வட்டாரக்கல்வி அலுவலக கட்டட கூரை ஒழுகுவதால் ஆவணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
ஒருங்கிணைந்த சிங்கம்புணரி ஒன்றியத்தில் இருந்து 1992 ல் எஸ்.புதுார் ஒன்றியம் தனியாக பிரிக்கப்பட்டது. அங்கு புதிய உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் அமைப்பதற்காக அப்பகுதி தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து சொந்த பணத்தில் அரசுக்கு இடம் வாங்கி கொடுத்தனர். அங்கு புதிய தொடக்கக் கல்வி அலுவலகம் கட்டப்பட்டு, தற்போது வட்டார கல்வி அலுவலகமாக செயல்படுகிறது. தற்போது அக்கட்டடம் பழுதடைந்து கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகுகிறது.
இதனால் மழைக்காலங்களில் ஆவணங்களை பாதுகாப்பது அதிகாரிகளுக்கு பெரிய சிரமமாக உள்ளது. தொடர் மழை பெய்யும் போது ஆசிரியர் களின் முக்கிய ஆவணங்கள் மழையில் நனைந்து பாழாகும் சூழல் உள்ளது. எனவே இக்கட்டடத்தை உடனே சீரமைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.