/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு '‛லீன்' திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : அக் 05, 2024 04:08 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனம் சார்பில் 'லீன்' திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், அக்.,15 ல் நடைபெறும் என உதவி இயக்குனர் உமா சந்திரிகா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன மதுரை கிளையின் சார்பில், தொழில் நிறுவனங்களுக்கான 'லீன்' திட்டம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது.
இதில், உள்நாட்டு, சர்வதேச போட்டி தன்மையை மேம்படுத்துதல், பணியிடத்தில் சிக்கன உற்பத்தி நுட்பங்களை மாற்றி அமைக்க ஆர்வமுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இத்திட்டம் மூலம் பயன் பெறலாம்.
அக்., 15 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில், இதற்கான இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 'உதயம்' சான்று பெற்ற முதலில் பதிவு செய்யும் 60 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மேலும் விபரத்திற்கு 98420 35441ல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.