/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாய்ந்த மின்கம்பங்கள் விபத்து அபாயத்தில் மக்கள்
/
சாய்ந்த மின்கம்பங்கள் விபத்து அபாயத்தில் மக்கள்
ADDED : பிப் 13, 2024 06:33 AM

இளையான்குடி ; இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழநெட்டூர் பகுதியிலிருந்து முனைவென்றி கிராமத்திற்கு செல்லும் வழியில் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் புதிதாக 30க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன.
அந்த மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்த நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கீழநெட்டூர் பாலமுருகன் கூறுகையில், கீழநெட்டூரிலிருந்து முனைவென்றி கிராமத்திற்கு சென்ற மின் கம்பங்கள் மிகவும் சேதமானதை தொடர்ந்து அதனை மாற்றக்கோரி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மின்வாரிய அதிகாரிகள் பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக மின் கம்பங்களை அமைத்தனர்.
தற்போது அமைத்த மின் கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்த நிலையில் உள்ளதால் எப்போது கீழே விழுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மின்வாரியத்தினர் இப்பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.