தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விரிவுரையாளர்கள்  போராட்டம் 

 விரிவுரையாளர்கள்  போராட்டம் 

 விரிவுரையாளர்கள்  போராட்டம் 


ADDED : பிப் 07, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மானியக்குழு நிர்ணயித்த ரூ.57,800 வழங்க வலியுறுத்தி சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரி முன் வாயிற் முழக்க போராட்டம் நடத்தினர்.

மாநில அளவில் அரசு கல்லுாரிகளில் 8156 கவுரவ விரிவுரையாளர்கள் 30 ஆண்டாக பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. பல்கலை மானியக்குழு நிர்ணயித்தபடி மாதம் ரூ.57,800 சம்பளத்தை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, அரசு மகளிர் கல்லுாரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற் முழக்க போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us