தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விரிவுரையாளர்கள்  போராட்டம் 

 விரிவுரையாளர்கள்  போராட்டம் 

 விரிவுரையாளர்கள்  போராட்டம் 


ADDED : பிப் 10, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மானியக்குழு நிர்ணயித்த ரூ.57,800 வழங்க வலி யுறுத்தி சிவகங்கை அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு களை புறக்கணித்து உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அளவில் அரசு கல்லுாரிகளில் 8156 கவுரவ விரிவுரையாளர்கள் 30 ஆண்டாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் தரப் படுகிறது.

பல்கலை மானியக்குழு நிர்ணயித்த படி மாதம் ரூ.57,800 சம்பளத்தை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லுாரி, அரசு மகளிர் கல்லுாரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரை யாளர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடாமல் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

* காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு களை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிளைத் தலைவர் முருகேசன் தலைமையில், செயலாளர் சுப்பிரமணியன் உட்பட 75 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us