நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: மாவட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தேவகோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து சட்ட சேவை முகாமை தேவகோட்டை கோர்ட் வளாகத்தில் நடத்தினர்.
சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி செந்தில்முரளி, மாவட்ட சட்ட பணிகள் குழு நீதிபதி ராதிகா முன்னிலை வகித்தார்.
தேவகோட்டை சார்பு நீதிபதி கலைநிலா வரவேற்றார். முகாமில் வருவாய்த்துறை, குழந்தைகள் வளர்ச்சி துறை, தோட்டக்கலை, மலைவாழ் பயிரினங்கள் துறை, சமூக நலத்துறை, ஹோமியோபதி சித்த மருத்துவத்துறை, கண் சிகிச்சை பிரிவு, போக்குவரத்து துறை மற்றும் கனரா வங்கியினர் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குற்றவியல் நீதிபதி பூர்ணிமா, உரிமையியல் நீதிபதி பிரேமி, வக்கீல் சங்க நிர்வாகிகள், தாளாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நீதிபதி பிரேமி நன்றி கூறினார்.

