ADDED : ஜன 22, 2025 09:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை அரசு உதவி பெறும் கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வே.சுப.தியாகராசன் நினைவாக அவரது மகன்கள் ரவீந்திரன், குமார், சுப்பிரமணியன் ஆகியோரால் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நுாலக கட்டட திறப்பு விழா நடந்தது.
நீதிபதி சொக்கலிங்கம் தலைமை வகித்து திறந்து வைத்தார். தலைமையாசிரியர் பொறுப்பு ஆரோக்கிய ஸ்டெல்லா வரவேற்றார்.
பள்ளிக்குழு தலைவர் கண்ணப்பன், பள்ளிச் செயலர் நாகராஜன், பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மேலாளர் சுப்பையா, நல்லாசிரியர் கண்ணப்பன், முன்னாள் தலைமையாசிரியர் மகாலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.