ADDED : பிப் 21, 2025 06:46 AM

சிவகங்கை: எல்.ஐ.சி., யில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம் நடத்தினர்.
எல்.ஐ.சி., ஊழியர் சங்க தலைவர் கர்ணன் தலைமையில் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க செயலாளர் தர்னீஸ்ராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் ஆனந்தமூர்த்தி, கிருஷ்ணகுமார், பாட்சா முன்னிலை வகித்தனர்.
நிர்வாகி லட்சுமி ராணி நன்றி கூறினார். எல்.ஐ.சி.,யில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். எல்.ஐ.சி., நிர்வாகத்தில் காலியாக உள்ள மூன்று மற்றும் 4 ம் பிரிவு ஊழியர்கள் பணி நியமனத்தை துவக்கவேண்டும்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காரைக்குடியில் எல்.ஐ.சி.,  கிளை அலுவலகம் முன்பு  நடந்த போராட்டத்திற்கு தலைவர் முத்துராமன் தலைமையேற்றார்.
செயலாளர் நெல்லியான் காசிலிங்கம் பேசினர். பென்ஷன் சங்க செயற்குழு உறுப்பினர் சங்கரேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

