ADDED : ஜன 25, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பள்ளத்துார் அருகேயுள்ள அழகாபுரியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி 65. இவரது மனைவி செல்லம்மாள் 50. இருவரும் கட்டட தொழிலாளர்கள். இருவருக்கும் கடந்த 2019 ஜூலை 6ம் தேதி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி போதையில் இருந்ததால் மனைவி செல்லம்மாளை கட்டையால் அடித்து கொலை செய்தார்.
பள்ளத்துார் போலீசார் வெள்ளைச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பிரபாகர் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சத்யதாரா, வெள்ளைச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.