ADDED : நவ 15, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாசி படர்ந்ததால் பாசனக்கண்மாய் தண்ணீர் முழுவதும் பச்சையாக மாறியது.
இவ்வொன்றியத்தில் மதுராபுரி ஊராட்சி வேங்கைப்பட்டியில் தொட்டியங்காத்தான் கண்மாய் தொடர் மழை காரணமாக நிரம்பியுள்ளது. விவசாயிகள் நடவுப் பணிகளை துவக்கி வருகின்றனர். பல மாதங்களாக தண்ணீர் இல்லாமல் இக்கண்மாய் வறண்டு கிடந்த நிலையில் தற்போது பாதி தண்ணீர் தேங்கியது. ஆனால் சில நாட்களிலேயே கண்மாய் முழுவதும் பாசி படர்ந்து நீர் முழுவதும் பச்சையாக மாறியுள்ளது.
பாசி படரும் பட்சத்தில் தண்ணீர் சீக்கிரம் வற்றிவிடும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே பாசன கண்மாய்களில் பாசி படர்வதை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.