ADDED : ஏப் 18, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:மலம்பட்டி செக்போஸ்டில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் சந்தனகுமார், எஸ்.எஸ்.ஐ., ராஜபாண்டி உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.
வாகனத்தில் மதுரை மாவட்டம் மேலுார் அருகே கீழவளவை சேர்ந்த அஜித் குமார் 30 உதவி கேட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் பெங்களூரு மதுபானம் 47 பேக்குகள், ஜூஸ் பேக் போல் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் அஜித்குமாரை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
