/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலக்கிய போட்டி கல்லுாரிக்கு கேடயம்
/
இலக்கிய போட்டி கல்லுாரிக்கு கேடயம்
ADDED : டிச 28, 2024 08:05 AM

தேவகோட்டை, :  தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி நிறுவனர் அண்ணாமலை செட்டியார் 101 வது பிறந்த நாள் விழா  நடைபெற்றது.  முதல்வர் நாவுக்கரசு தலைமையில் தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன்  முன்னிலையில்  இலக்கிய போட்டிகள் நடந்தன.
இரண்டாம் நாள் பிறந்த நாள், பரிசளிப்பு விழா கல்லூரி தலைவர் லட்சுமணன் தலைமையில் துணை தலைவர் சாந்தி முன்னிலையில் நடந்தது.
முதல்வர் நாவுக்கரசு வரவேற்றார்.  பேராசிரியர் கஸ்தூரிபா தேவசேனா, அலுவலர் சோலச்சி, மாணவி ராஜபாரதி பேசினர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு,  முதலிடம் பெற்ற காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரிக்கு வெற்றி கோப்பையை இதயம் குழும தலைவர் முத்து வழங்கினார். தலைவர் லட்சுமணன் ஏற்புரையாற்றினார்.

