தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சுமைதுாக்கும் தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்'  தற்காலிக ஊழியரை நியமிக்க எதிர்ப்பு 

 சுமைதுாக்கும் தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்'  தற்காலிக ஊழியரை நியமிக்க எதிர்ப்பு 

 சுமைதுாக்கும் தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்'  தற்காலிக ஊழியரை நியமிக்க எதிர்ப்பு 


ADDED : ஆக 19, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதன் காரணமாக 'அவுட் சோர்சிங்' முறையில் ஊழியர்களை நியமிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் நுகர் பொருள் வாணிபக்கழகம் செயல்படுகிறது. இங்கிருந்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றை இறக்கி வைக்கும் பணிகளில் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சங்க தேர்தலை நடத்த வேண்டும். சம்பள உயர்வு தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும்.

14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் சிவப்பு கார்டு தொழிலாளர்களுக்கு பச்சை கார்டு வழங்கி, அவர்களுக்கு வாரம் முழுவதற்குமான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் இருந்து ரேஷன் கடை, விடுதிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் உள்ள 9 கோடவுன்களில் 82 சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 'அவுட் சோர்சிங்' முறையில் வடமாநில தொழிலாளர்களை நியமித்து கோடவுன்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களை போலீஸ் பாதுகாப்புடன் ரேஷன் கடை, விடுதிகளுக்கு எடுத்து செல்ல மண்டல மேலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு சுமைதுாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us