நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கை காமராஜர் காலனி சின்னத்துரை மகன் கருப்பையா 45, இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.
சிவகங்கை அருகே உள்ள கண்டனியிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல்மூடைகளை லாரியில் ஏற்றி மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கோடவுனுக்கு கொண்டு வந்த போது லாரி பழுதடைந்து நின்றது.
லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு நெல் மூடைகளை மாற்றம் செய்தபோது எதிர்பாராத விதமாக நெல் மூடை கருப்பையா மீது சாய்ந்ததில் மூச்சு திணறி பலியானார். மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

