UPDATED : ஆக 17, 2026 05:07 PM
ADDED : ஆக 17, 2026 05:01 PM
தேவகோட்டை:தேவகோட்டையில் ரூ ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்ட எரிவாயு மூலம் எரியூட்டப்படும் நவீன மயானம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. 10 ஆண்டு கழித்து பல கட்ட போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக செயல்பாட்டுக்கு வந்தது. ரூ 3 ஆயிரம் கட்டணம் என்பதால் மக்களுக்கு உதவியாக இருந்தது. சிலிண்டர் விலை கூடியதால் கட்டணம் உயர்த்த திட்டமிட்ட நிலையில், குத்தகை எடுத்தவருக்கும் நகராட்சிக்கும் பிரச்னை உருவானது. இந்த நிலையில் நவீன மயானம் சில மாதங்களாக செயல்படவில்லை. மீண்டும் அருகில் உள்ள சித்தானுார் ஊராட்சி மயானத்திற்கு செல்கின்றனர்.
இந்நிலையில் நவீன மயானம் ரோட்டரி சங்கத்திற்கு வழங்கப்பட்டது. அவர்களும் தங்கள் செயல்பாட்டை தொடங்கவில்லை. மயானத்தில் சில இயந்திரங்கள் பழுது ஏற்பட்டு இருப்பதாகவும் , பழுதை சீர் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் வருவதில் தாமதம் செய்து வருகிறது.
