ADDED : செப் 13, 2025 03:57 AM

காரைக்குடி: சாக்கோட்டை அருகே பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கட்டட சுவரில் மின் கசிவு ஏற்படுவதால் அச்சம் நிலவுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகோட்டை ஊராட்சி யில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 165 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் உள்ளனர். மூன்று கட்டடங் களுடன் செயல்படும் இப்பள்ளியில், இரு கட்டடம் காம்பவுண்ட் சுவருக்குள்ளும், ஒரு கட்டடம் வெளியே தனியாக உள்ளது.
இந்தக் கட்டடத்தில், வகுப்பறை செயல் படுவதோடு, ஸ்மார்ட் டிவி கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. இக்கட்டடத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து வெளி யேறுகிறது. இதனால் சுவரில் மின் கசிவு ஏற் படுகிறது.
மாணவர்கள் இந்த வகுப்பறையில் அமர வைக்கப்படாமல், மற்றொரு கட்டடத்தின் வராண்டாவில் அமர்ந்து பாடம் படிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் நலனை கவனத்தில் கொண்டு வகுப்பு கட்டடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், வகுப்பறை கட்டடத்தில் சுவரில் எர்த் அடித்தது. பிறகு அப் பிரச்னை சரிசெய்யப்பட்டு விட்டது. மழைக்காலங்களில் சுவற்றில் தண்ணீர் கசிவதும் சரி செய்யப்பட்டு விட்டது. ஆசிரியர் ஒருவர் விடுப்பில் இருப்பதால், மாணவர்கள் தனியாக அமர வைக்காமல் பாதுகாப்பு காரணமாக இக்கட்டடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.