/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்
/
'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்
ADDED : மார் 18, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருப்புத்துாரில் நாளை (மார்ச் 19) உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் அறிவித்தார்.
அவர் கூறியதாவது, இம்முகாமில் கலெக்டர் தலைமையில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கும். தாலுகா அளவில் உள்ள அனைத்து மக்கள் திட்ட பணிகள், நலத்திட்டங்கள் பார்வையிடப்படும்.
அன்று மாலை 4:00 மணிக்கு திருப்புத்துார் சன்மீனா மகாலில் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்.
இதில், தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் குறைகளை மனுக்களாக வழங்கி, நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.