ADDED : ஜூலை 07, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற து. கானாடுகாத்தான் ரயில்வே கேட்டில் லாரி ஒன்று மோதியதால் சிக்னல் செயல்படாமல் போனது.
சிக்னல் செயல்படாதது குறித்து ரயில்வே பணியாளர்கள் செட்டிநாடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். எக்ஸ்பிரஸ் ரயில் செட்டிநாடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சிக்னல் சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ரயில் ஒரு நேரத்திற்கும் மேலாக தாமதமாக சென்றது.
