/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைந்தழுத்த மின்சாரத்தால் தவிப்பு
/
குறைந்தழுத்த மின்சாரத்தால் தவிப்பு
ADDED : மார் 22, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார்: எஸ்.புதுார் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் தவிக்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் கட்டுக்குடிப்பட்டி, மேலவண்ணாரிருப்பு, மின்னமலைப்பட்டி, உரத்துப்பட்டி பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது.
வீடுகளில் மின்மோட்டார் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. விவசாய நிலங்களில் அனைத்து மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயக்கப்படும்போது மின்சார பற்றாக்குறையால் பல மோட்டார்கள் சேதமடைகின்றன.
எனவே இப்பகுதிக்கு மின்விநியோகத்தை சீராக்க விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.