/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் விடுதி கட்டணம் நிர்ணயம்
/
மடப்புரம் விடுதி கட்டணம் நிர்ணயம்
ADDED : ஆக 07, 2025 05:24 AM
திருப்புவனம் : மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட தங்கும் விடுதிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு பக்தர்கள் தங்க 2022 ஜூன் 10ம் தேதி கோயில் எதிரே 4 ஆயிரத்து 200 சதுர அடியில் இரண்டு கோடியே 28 லட்ச ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் உள்ளிட்டவை கட்டப்பட்டு திறக்கப்பட்டன.
ஆனால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படாததால் தங்கும் விடுதி செயல்படவில்லை. தற்போது முதல் மாடியில் உள்ள எட்டு அறைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒற்றை எண் கொண்ட அறைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் இரட்டை எண் கொண்ட அறைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் 10 - 20 பேர் வரை தங்கலாம் என்றும் அனைத்து அறைகளிலும் கழிப்பறை, குளியலறை வசதி உள்ளது என்றும், கோயில் அலுவலகத்தில் அறை வேண்டும் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் விரைவில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வசதி வரவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.