/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வாலிபர் கொலையில் சிக்கிய மதுரை கூலிப்படை
/
சிவகங்கை வாலிபர் கொலையில் சிக்கிய மதுரை கூலிப்படை
ADDED : டிச 26, 2024 04:51 AM
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள மேலவாணியங்குடி முருகேசன் மகன் வெங்கடேஷ் 28. இவர் சிவகங்கையில் பூக்கடை வைத்திருந்தார். 19 இரவு 8:30 மணிக்கு கடையிலிருந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றார். காரில் பின் தொடர்ந்த கும்பல் அவரது வீட்டின் அருகே வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பினர்.
சிவகங்கை போலீசார் வெங்கடேஷ் உடலை கைப்பற்றி கொலையாளிகளை தேடினர். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் தனிப்படை அமைத்தார். வெங்கடேஷ் மீது மதுரை மாவட்டம் திருப்பாலை போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.
ஆகையால் முன்பகை காரணமாக மதுரையை சேர்ந்தவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை துவக்கினர். இந்நிலையில் மதுரை கூலிப்படையை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

