ADDED : அக் 13, 2024 04:44 AM

இக்கோயிலில் நேற்று முன்தினம் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்த போது, மதியம் 1:00 மணி அளவில் மூலவர் சன்னதி முன்புறமுள்ள திருமாமணி மண்டபத்தின் கூரையின் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு பக்தர்கள் யாரும் இல்லாததால் காயமடையவில்லை.
இதனால் நேற்று புரட்டாசி கடைசி சனி உத்ஸவத்தை முன்னிட்டு உற்ஸவர் திருமமாணி மண்டபத்தில் எழுந்தருளவில்லை. மூலவர் சன்னதியில் உற்ஸவர் தரிசனத்தால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
கடந்த ஆண்டு திருப்பணி நடந்து கும்பாபிேஷகம் நடந்த நிலையில் மூலவர் முன் உள்ள மண்டபத்தின் கூரையில் பூச்சு பெயர்ந்துள்ளது.தங்க விமான திருப்பணிக்காக கடந்த 2007 ல் பாலாலயம் நடந்தது. அந்த திருப்பணிக்காக சாரம் கட்ட கம்பிகள் ஊன்றியுள்ளனர். மேலும் விமான சுதை சிற்பங்களின்
பூச்சுக்களும் அகற்றப்பட்டுள்ளதால் மழை நீர் ஊருடுவி பரமபத சன்னதி,நின்ற நாராயணப் பெருமாள் சன்னதி,ராமானுஜர் மந்திரம் உபதேசித்த மண்டப பகுதி, மூலவர் சன்னதி படியேறும் மண்டபப் பகுதிகளில் மழை காலங்களில் நீர்கசிவு ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தகுந்த பொறியாளர்கள் மூலம் கட்டுமானத்தை ஆய்வு செய்து மழைநீர் கூரையை பலவீனப்படுத்தமாலிருக்க தக்க பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பக்தர்கள் கோரியுள்ளனர். சமஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் கூறுகையில், விமானத் திருப்பணிக்காக போடப்பட்ட சாரத்தின் துவாரங்கள் வழியாக மழை நீர் கசிந்துள்ளது,
அதில் தற்போது பராமரிப்பு பணி செய்ய உள்ளோம். அதில் முளைத்திருந்த செடி,கொடிகள் உழவாரப்பணியின் போது அகற்றப்பட்டு பூச்சி மருந்து வைக்கப் பட்டுள்ளது.
மழைநீர் வெளியேறும் துாம்பின் அடைப்பும் நீக்கப்பட்டு, நீர்க்கசியும் இடங்களில் கான்கிரீட் போடப்படும். நிரந்தர தீர்வாக விமானத்திருப்பணி பூர்த்தி ஆக வேண்டும். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.