/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம்
/
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம்
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம்
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம்
ADDED : ஜூலை 08, 2025 10:20 PM

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனித் தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூன் 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவின் போது தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
ஜூலை 5 ல் கழுவன் திருவிழா, ஜூலை 6ல் மீனாட்சி பட்டாபிஷேகம், 7ல் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று ஆனித் தேரோட்டம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளினர். மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மீனாட்சி சொக்கநாதர் பெரிய தேரிலும், அம்மன், விநாயகர், முருகன் சிறிய தேர்களிலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் வீதி உலா வந்தனர்.மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
புதிதாக அமைக்கப்பட்ட தேரடி படிகளில் பக்தர்கள் நேர்த்திக்கடன் தேங்காய்களை உடைத்தனர். 10 ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது.