/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தோட்ட காவலாளியை கொலை செய்தவர் கைது
/
தோட்ட காவலாளியை கொலை செய்தவர் கைது
ADDED : மே 30, 2025 03:20 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோப்பில் சில மாதங்களாக கமுதி அருகே உள்ள பெருமாள்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் 64, காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காவலாளி முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய கமுதி அருகே உள்ள கண்ணார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரவியம் மகன் இளமாறன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: முருகனும்,இளமாறனும் அருகருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர்கள், இருவரும் நேற்று முன்தினம் இரவு தோப்பில் மது அருந்திய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து இளமாறன் அங்கிருந்த அரிவாளால் முருகனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது என்றனர்.