/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் டாக்டரை தாக்கியவர் சிக்கினார்
/
பெண் டாக்டரை தாக்கியவர் சிக்கினார்
ADDED : மார் 27, 2025 02:17 AM

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை தாக்கிய நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து, கடந்த 24 இரவு 11:00 மணிக்கு விடுதிக்கு பயிற்சி பெண் டாக்டர் புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்த நபர் அவர் முகத்தில் துணியால் மூடி தாக்கி விட்டு தப்பினார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தனிப்படை போலீசார் நேற்று சிவகங்கை நகர் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 20, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சந்தோஷுக்கு கொடைக்கானலில் சில தினங்களுக்கு முன் நடந்த கொலையிலும் தொடர்பு இருப்பது தெரிந்தது. சந்தோஷ், எதற்காக அந்த பயிற்சி பெண் டாக்டரை தாக்கினார்.
வேறு ஏதும் நோக்கத்தோடு அங்கு சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.