/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில வில்வித்தை போட்டி மானாமதுரை சாதனை
/
மாநில வில்வித்தை போட்டி மானாமதுரை சாதனை
ADDED : அக் 14, 2025 04:01 AM

மானாமதுரை: காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை அணி மாணவர்கள் ஏராளமான பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
காரைக்குடியில் இப்போட்டி நடந்தது. இதில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை அகாடமி மாணவர் 8 வயது பிரிவில் சுஷாந்த் 2வது இடத்தையும், ஜெயமித்ரன் 3வது இடத்தையும்,10 வயதுக்குட்பட்ட பிரிவில் கலையொழியன் முதல் இடத்தையும், லிடின் சாய் 2ம் இடத்தையும், ஆண்கள் பிரிவில் பிரனிஷ், கிருத்திக்பில்லு, அதிரஞ்சன் முதல் இடத்தையும், பெண்கள் பிரிவில் தேசிகா ஸ்ரீ முதல் இடம், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் அருள்குமரன், ராஜ்குமார் முதல் இடத்தையும், புரபஷனல் பிரிவில் நித்தின் மெஸ்லி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பயிற்சியாளர் பெருமாள் உள்ளிட்டோரை ஆசிரி யர்கள் பாராட்டினர்.