/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கன்னார் தெருவில் கரடு முரடான ரோடால் அவதி
/
மானாமதுரை கன்னார் தெருவில் கரடு முரடான ரோடால் அவதி
மானாமதுரை கன்னார் தெருவில் கரடு முரடான ரோடால் அவதி
மானாமதுரை கன்னார் தெருவில் கரடு முரடான ரோடால் அவதி
ADDED : ஜன 03, 2026 06:47 AM

மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள சாலை கரடு முரடாக மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
மானாமதுரை நகராட்சியில் ரூ.39 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து தெருக்களிலும் உள்ள ரோடுகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது.
தோண்டப்பட்ட இடங்களில் ரோடு அமைக்கும் பணி மிகவும் மோசமாக இருப்பதாக புகார் உள்ளது.
கன்னார் தெரு பகுதியில் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்ட நிலையில் தற்போது வரை ரோடு அமைக்கும் பணி நடக்கவில்லை.
அப்பகுதியில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் தோண்டப்பட்ட பகுதியில் புதியதாக ரோடு அமைக்க வேண்டும்.