தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முடிவுக்கு வந்தது மானாமதுரை போராட்டம் பாதிப்பு அதிகரித்ததால் வாபஸ்

 முடிவுக்கு வந்தது மானாமதுரை போராட்டம் பாதிப்பு அதிகரித்ததால் வாபஸ்

 முடிவுக்கு வந்தது மானாமதுரை போராட்டம் பாதிப்பு அதிகரித்ததால் வாபஸ்


ADDED : மார் 13, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாமதுரை: வாலிபர் ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பை அடுத்து 5 நாட்களாக மறியல் நடந்த நிலையில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மானாமதுரை உள்ளிட்ட பல இடங்களில் எதிர் போராட்டம் நடந்தது. இந்நிலையில் நீதிமன்றமும் உத்தரவிட்டதால் ஆகாஷ் உறவினர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

போலீசார் தாக்கியதால் தான் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் 5 நாட்களாக மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரை வழி விடு முருகன் கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக விசாரணை நடந்தது. அப்போது வழக்கறிஞர் குழு அமைத்து மறியலில் ஈடுபடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைதியான முறையில் போராட்டத்தை தொடர ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

வழக்கறிஞர் குழு நேற்று முன்தினம் இரவு போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

வாலிபரை தாக்கிய போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதனால் போக்குவரத்து தடைபட்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வளநாடு கிளங்காட்டூர்,அன்னவாசல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர் போராட்டத்தை துவங்கினர். மறியலை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வளநாடு விலக்கு ரோட்டில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்களிடமும் வழக்கறிஞர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மானாமதுரையை சுற்றி பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் ஆகாஷின் உறவினர்கள் காலை 9:00 மணிக்கு நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். பஸ்களை அனுமதிக்க மறுத்தனர்.

இதனால் மானாமதுரையில் முற்றிலுமாக போக்குவரத்து தடைபட்டது. மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் திருப்புவனத்திற்கு முன் சிவகங்கை வழியாக திருப்பி விடப்பட்டன.

போலீசார், வழக்கறிஞர் குழுவினர் பேச்சுவார்த்தையை அடுத்து நேற்று மாலை 4:00 மணிக்கு நான்குவழிச்சாலையில் மறியல் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற இடங்களில் நடந்த மறியல்களும் கைவிடப்பட்டன.

எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாற்றம்

மானாமதுரை போராட்டங்கள் குறித்து டி.ஐ.ஜி., மற்றும் ஐ.ஜி., அலுவலகங்களுக்கு மாவட்டத்தில் இருந்து உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இந்நிலையில், நிர்வாக காரணம் எனக்கூறி எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாளை சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி., மணிவண்ணன் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக காரைக்குடி தெற்கு இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us