/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலப்பிடாவூரில் மண்டலாபிஷேக விழா
/
மேலப்பிடாவூரில் மண்டலாபிஷேக விழா
ADDED : அக் 23, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மேலப்பிடாவூர் பூர்ணகலா, புஷ்கலா சமேத வெள்ளாரப்பன் (எ) முத்தையா அய்யனார் கோயிலில் மராமத்து பணி நடைபெற்று செப்.8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைக்காக தினமும் மாலை கோயிலில் அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றது.
மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும் கோயிலின் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மாலை திருவிளக்கு பூஜை,இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை மேலப்பிடாவூர்,குலக்கட்டபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.