ADDED : ஜன 07, 2024 04:24 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கிருங்காக்கோட்டையில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் நினைவாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
மானாமதுரை அருகே உள்ள கிருங்காகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனி ஆண்டவர், ஜோதி மகன்கள் 3 பேரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் வீடுகளில் ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இவர்கள் இந்தியாவுக்காக போரில் சண்டையிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக கிருங்காகோட்டையில் முதன் முதலாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர்.
எம்.எல்.ஏ., தமிழரசி,தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநில கவுரவ தலைவர் தங்கராஜ் போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டியில் தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.